கழிவு நீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் பலி ஒருவர் கவலைக்கிடம்

கழிவு நீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 2 பேர் பலி ஒருவர் கவலைக்கிடம் from youtube by Karur Boomi
featured video : கல்லூரி மாணவிகள் 4 பேர் பலி நாகா்கோவில் அருகே:
featured video : லாரி மோதி 25 பேர் பலி ! Tragic Road Accident in Andhra Pradesh
சேலத்தில் கழிவுநீர் தொட்டி கட்டும் பணியில் ஈடுபட்டிருந்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் மூச்சுத்தினறி உயிரிழப்பு. மேலும் ஒருவர் மயக்கம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் ரெட்டியூர் பகுதியில் வெள்ளிபட்டறை உரிமையாளர் சீனி என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார். இந்த வீட்டிற்கான கழிவுநீர் தொட்டி கடந்த சில தினங்களுக்கு முன் கட்டப்பட்டு காண்கிரீட் கலவையால் மூடப்பட்டது. இந்தநிலையில் கழிவுநீர் தொட்டிக்குள் இருந்து காண்கிரீட் முட்டு அகற்றுவதற்காக கட்டிட தொழிலாளர்கள் 3 பேர் நேற்று (08-11-16) காலை இறங்கியுள்ளனர். திடீரென்று உள்ளே இறங்கிய தொழிலாளர்கள் மூச்சு தினறி மயங்கி விழுந்தனர். சிறிந்து நேரத்திற்கு பின்னர் தொட்டிக்குள் இருந்து அலறல் சத்தம் கேட்டு மற்ற தொழிலாளர்கள் சென்று பார்த்துள்ளனர். அப்போது மூன்றுபேரும் மயங்கி கிடந்ததை கண்டு அதிர்ச்சியுற்றனர். அதன்பின்னர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்படவே தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தொட்டிக்குள் இருந்தவர்களை மீட்டனர். இந்த சம்பவத்தில் தொட்டிக்குள் இறங்கிய ராஜா உள்பட 2 பேர் உயிரிழந்தனர். சத்தியராஜ் என்ற தொழிலாளரி மயக்க நிலையில் சேலம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
தொட்டிக்குள் செல்வதற்கு சிறிய அளவிலான துவாரம் மட்டுமே விடப்பட்டிருந்தது. நீண்டநாட்களாக மூடி வைக்கப்பட்டிருந்த தொட்டிக்குள், தொட்டிக்குள் காண்கிரீட்டை தாங்குவதற்கா அமைக்கப்பட்டிருந்த முட்டு இன்று காலைதான் பிரிக்கப்பட்டது. உடனடியாக உள்ளே இறங்கியதாலும், சுவாசிப்பதற்கு போதுமான ஆக்சிஜன் இல்லாததாலும் தொழிலாளரிகள் மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது.
இந்த சம்வம் தொடர்பாக அழகாபுரம் போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பேட்டி--ரவி--அப்பகுதிவாசி